ஒட்டுசுட்டானில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வயோபதித் தம்பதியரைத் தாக்கி, அச்சுறுத்தி 32 பவுண் நகைகளையும், 7 லட்சம் ரூபாவையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த மூவர் வீட்டிலிருந்த வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரது மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்திக் கொள்ளையில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
வீடு மற்றும் வீட்டுடன் இணைந்த வணிக நிலையம் என்வற்றைச் சல்லடையிட்டுத் தேடிய கொள்ளையர்கள் 32 பவுண் நகைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்த 7 லட்சம் ரூபா பணம் என்வற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றது என்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 60 வயதான வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post