அரசாங்கச் சொத்துக்களுக்கு சேதம் ஏந்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவோர் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் அமைதி நிலைமை பேணப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டுள்ளமையாலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுப்படுத்த வேண்டும் என்பதாலும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அமைதியை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்புப் படையினர் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டி ஏற்படும் என்று இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post