பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனலர் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தின் அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தியே கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார், இராணுவம் மற்றும் மாவட்டச் செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post