வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்களின் இரு சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவடி, சங்கரத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரின் சடலமும், 73 வயதுடைய இன்னொருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
அவர்கள் இருவருமே அந்த வீட்டில் வசித்து வருகின்றனர் என்றும், அவர்களுக்கு உதவிக்கு எவரும் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாதந்த உதவிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள இருவரும் வரவில்லை என்பதால் கிராம அலுவலர் வீட்டுக்குச் சென்று பார்ததபோதே அவர்கள் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post