வடமராட்சிக் கடலில் மீனவர் படகு ஒன்றின் மீது கடற்படை படகு மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தே.தேவகுமார் என்பவரின் படகே சேதமடைந்துள்ளது.
கடற்படையினரின் படகு மோதியதில் படகும், வெளியிணைப்பு இயந்திரமும் பயன்படுத்த முடியாத அளவு சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
படகு சேதமடைந்ததால் படகில் இருந்த இரு மீனவர்கள் கடலில் தத்தளித்தனர் என்றும், அவர்களைக் கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post