தற்போது வடக்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில், டெங்குத் தொற்றுத் தொடர்பில் மக்கள் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதிகளில் டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில், தென்மராட்சியின் கடந்த மாதம் மட்டும் 10 பேர் டெங்குத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பெய்யும் மழையால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் டெங்குத் தொற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதனால் மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய நீரேந்து பொருள்களை வீடுகள் மற்றும் காணிகளில் இருந்தும் அப்புறப்படுத்தி, சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post