வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கலாநிதி றெகான் மற்றும் வவுனியா பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த பட்டகலு ஆகியோர் தெரிவித்தனர்.
“நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு இதுவரை 411 பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் இந்த ஆண்டு 4 பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த ஆண்டு தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவரும் 30 வயதுடையவர்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post