ராஜபக்சக்களின் வீரகெட்டிய, வளவுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, காணாமல்போன நாய் குட்டியொன்று, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்ததாக அந்த யுவதி கூறிய போதிலும் ,கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் யுவதியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ராஜபக்சக்களின் சொத்துகள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, இந்த நாய் குட்டியை அந்த யுவதி எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தாக்குதலுடன் அவர் தொடர்புபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Discussion about this post