ராஜபக்ச குடும்பத்தவர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு தீர்வை காண்பதற்காக முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த 11 கட்சிகளும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை பிரதானமாக முன்வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் எவரும் இடம்பெறக்கூடாது என்ற யோசனையையும் முன்வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை கண்டபின்னர் ஜனநாயக தேர்தல்குறித்து யோசனையையும் முன்வைத்தோம், எனினும் ஜனாதிபதி இதனை நிராகரித்துள்ளார்.
இது நாட்டில் நிச்சயமற்ற நிலையை மேலும் ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார் என ரோகன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post