இன்று நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது. இந்தக் கொடுங்கோல் அரசை உடனடியாகத் தூக்கியெறிந்து, மக்கள் சார் அரசை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த வண்ணம் மேற்கொள்ளப்படும் அழிவை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் நாட்டுக்குக் கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த அரசு முழு நாட்டு மக்களையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிட்டது என்றும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
Discussion about this post