ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்கள் தீவிரம்
அடைந்து வருகின்றன. வயநாட்டில் பிரதமர் மோடி உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட
வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 23
ஆம் திகதி தீர்ப்பளித்தது.
அதற்கு அடுத்த நாளில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாடு இந்தியா முழுவதும்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
ராகுல் காந்தியின் தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் காங்கிரசார் நேற்று கண்டன
போராட்டம் நடத்தினர். இந்த பேராட்டத்தின்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச்சென்றனர். இதனால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் போபால் நகரில் வாய்களில் துணி கட்டி பூட்டு போட்டு காங்கிரஸ் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சண்டிகாரில் காங்கிரசார் புதுடெல்லி-சண்டிகார் சதாப்தி ரெயிலை நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post