ரஷ்யாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் நடந்துள்ளது.
அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
உயிரிழந்த 4 மாணவர்களில் இருவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் அனைவருக்கும் 18 முதல் 20 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் அங்குள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது.
Discussion about this post