யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது-78) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
ஒரு கண் மற்றும் காது குறைபாடுள்ள இவர் சைக்கிளில் வியாபார நோக்கமாகச் சென்றபோதே விபத்து நடந்துள்ளது.
ஏவி வீதியில் ரயில் கடவையைக் கடக்கும்போது ரயிலுடன் மோதிய இவர் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதேவேளை, நேற்றுமுன்தினமும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் மோதி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post