ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டுக் கவலையடைகின்றேன் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியூன் சங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கின்றேன் என்று தெரிவிததுள்ள அவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மற்றும் அனைத்துத் தரப்பில் இருந்தும் அமைதியைக் கோருகின்றேன் என்றும் தெரிவிததுள்ளார்.
இது தொடர்பான முழுமையான, வெளிப்பாடையான விசாரணை அவசியம் என்றும், அமைதியான போராட்டத்துக்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post