பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார்.
டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும், நிதி அமைச்சராக அவர் முன்னெடுக்கும் ‘அரசியல் கேமும்’ நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை ரணில் தடுத்து வருகின்றார், நாட்டு மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கான திட்டமும் அவரிடம் இல்லையெனவும் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.
எனவே, பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணிக்காமல், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க துறக்க வேண்டும் என்றார் அமைச்சர் தம்மிக்க.
அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டமானது, நாட்டுக்கு டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை காண்பிக்கும் போராட்டமாக அமைய வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.
Discussion about this post