மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால சட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, எதிரணி பிரதம கொறடாவான லஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.
குதிரை ஓடிய பிறகு கடிவாளம் பூட்டுவதுபோலவே, சர்வக்கட்சி அரசுக்கான கோரிக்கையை அரசு விடுத்துள்ளது. தற்போது காலம் கடந்துவிட்டது. முன்கூட்டியே செய்திருக்க வேண்டியதொன்றை, காலம் கடந்த பின்னர் செயற்வதற்கு முற்படுகின்றனர் எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி, தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றார் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
Discussion about this post