நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே, புதிய அரசில் அமைச்சு பதவி எதனையும் ஏற்காமல், நாடாளுமன்ற செயற்பாடு ஊடாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அரசுக்கான ஆதரவு மீளப்பெறப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
Discussion about this post