பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பையேற்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனவே, அவரால் விடுக்கப்படும் அழைப்பை ஏற்கமுடியாது என விசேட அறிக்கை மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள், கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Discussion about this post