ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே சபாநாயகர் முன்னிலையில், வஜிர எம்.பியாக உறுதியுரை ஏற்றார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்றதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜிர நியமிக்கப்பட்டுள்ளார்.
வஜிர அபேவர்தன, ஜனாதிபதி ரணிலின் விசுவாசி. பல வருடங்கள் ஐ,தே.கவில் நீடிப்பவர். நல்லாட்சியின்போதும் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்.
அதேவேளை, சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சபாநாயகர் இன்று சபைக்கு அறிவித்தார்.
Discussion about this post