இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபை செயற்படுகின்றது என்றும், அதனால் யாழ். மாநகர சபையை உடனடியாகக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகியோருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்கள் விரோதமாகவும், மத குரோதமாகவும் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையை கலைப்பதற்கான முன்னெடுப்பு தொடர்பான பரிந்துரை தொடர்பில் வடக்கு ஆளுநர் எழுதிய கடிதம் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சபையை கலைப்பதற்கான பரிந்துரையை முன் வைப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிக்கு உட்பட்டதாக இல்லாதபோதும், கடிதம் தொடர்பில் ஆளுநருக்கு பதில் அனுப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் இருந்து விளக்கத்தை கோரிப் பெறுவது என ஆணைக் குழுவின் அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தக் கடிதத்தின் பிரதி ஒன்று சட்டமா அதிபரிற்கும் அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post