இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில், மருத்துவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாதியர்கள் , சிற்றூழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 மற்றும் 22 திகதிகளில் கடமையில் இருந்தபோது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் மருத்துவர்கனள் தாதியர்கள், நோயாளர்கள் உட்பட்ட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
Discussion about this post