யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.
B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பின்புறமாக அமைந்துள்ள 12 ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நேரில் சமூகமளித்து குருதி கொடை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்கள் தேவையெனில் அல்லது இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post