யாழ்ப்பாணம் பல்கலைக் கழக இரண்டாம் வருட மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலட்டிச் சந்தியில் உள்ள தங்கும் அறையில் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த தனுசா என்னும் பல்கலைக்கழக இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவியே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்த இவர், கலட்டிச் சந்தியில் உள்ள தான் தங்கி நின்று கற்கும் அறைக்குச் சென்றுள்ளார். மேல்தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றுவிட்டு வருகின்றேன் என்று கூறிச் சென்ற அவர் நீண்ட நேரமாக கீழேவரவில்லை.
அதையடுத்து அவரது நண்பர்கள் மேலே சென்று பார்த்தபோது, அறை உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அழைத்தபோதும் பதில் கிடைக்காததால் கதவை ஒருவாறு திறந்து சென்றபோது, மாணவி துணியில் தூக்கிட்ட நிலையில், உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post