யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்பாக மனிதக் கழிவுகள் உள்ளடங்களி குப்பைகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குப்பைகள் வீசப்பட்டதால் மாணவர்களும், பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டமை அடுத்து, சுகாதார ஊழியர்களின் உதவியுடன் அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தக் குப்பைகளில் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று காணப்பட்ட நிலையில், அதை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Discussion about this post