யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள இலங்கைக்கான இந்திய (India) துணை தூதர அதிகாரிகள் மட்டும் திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையி்ல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா உணவகம் ஒன்றில் நேற்றையதினம் (17) நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் தற்போதைய தேர்தல் களநிலவரம் தொடர்பிலும் இலங்கை இந்தியா உறவு தொடர்பிலும் நீண்ட நேரமாக பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் களநிலவரம்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வடகிழக்கு மக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது சிறுபான்மை இன கட்சிகளின் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறான தாக்களை செலுத்தப்போகிறார் என்பது பற்றியும் இது சிறுபான்மை சமூகத்துக்கு சாதகமானதா ? பாதகமானதா ? போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது
இலங்கை இந்திய தொடர்பில் அரசியல் ரீதியான உறவு சுற்றுலாத் துறை அபிவிருத்தி , ஊடகவியலாளர்களுக்கான எதிர்கால பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் மக்களுடைய சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டுள்ளது.குறித்த கலந்துறையாடலில் யாழ் துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீ (Sai Murali) மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post