யாழ்ப்பாணம் நகரில் உள்ள முனியாப்பர் ஆலயம் முன்பாக ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபா பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது.
இன்று காலை ஆலயத்துக்கு வந்த ஒருவர் தொழிலில் முதலிடவிருந்த 10 லட்சம் ரூபாவை, பூசையில் வைத்து எடுத்துத் தருமாறு கோரியுள்ளார்.
பூசகரும் பணத்தை பூசையில் வைத்து விட்டு எடுத்துக் கொடுத்தபோது, அங்கு திடீரென வந்த இருவர் பணத்தைக் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாயம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post