யாழ்ப்பாணம், நுணாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த விபத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மறவன்புலவைச் சேர்ந்த 26 வயதான க.நிசாந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 29 வயதான தி.பார்த்தீபன் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏ-9 வீதி ஊடாக சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிப் பயணித்தபோது அதே திசையில் பயணித்த ஹையேஸ் வாகனம் அவர்களை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post