யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2 ஆயிரத்து 548 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த டெங்குத் தொற்றால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
கொனாத் தொற்றுக் காரணமாக மாகாணங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்குத் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிக குறைவாகும்.
இந்த வருடம் நடந்த உயிரிழப்புக்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.
Discussion about this post