யாழ்ப்பாணம், கொட்டடி – நாவந்துறையில் நேற்று நடந்த விபத்தில் இளைஞரு் ஒருவர் உயிரிந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. நவரட்ணராஜா சங்கீத் என்ற 31 வயது இளைஞரே உயிரழந்துள்ளார்.
இவர்கள் பயணித்த மோட்டார சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post