அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் (Flak jacket) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து , கிணற்றினை இறைத்த போது . கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீ்ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை தொடர்ந்து அவர்கள், அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.
இதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post