மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஏ-9 வீதியில் செம்மணி வரவேற்பு வளைவுப் பகுதியில் ஒன்றுகூடியவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத் தடை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அதனால் மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Discussion about this post