யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்றில் அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இல்லம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது.வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமராகுறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி அந்தப் பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post