பாணின் விலை நேற்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 450 கிராம் பாண் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பணிஸ் வகைகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, டீசல் பற்றாக்குறை தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு பாண் உற்பத்திக்கு 6 ஆயிரம் லீற்றர் டீசல் தேவை என்று கோரப்பட்டிருந்த நிலையில், 800 லீற்றர் டீசல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரால் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பேக்கரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலர் ஒரு தொகுதி டீசல் வழங்கியுள்ளார்.
அதனால் ஓரிரு நாளைக்கு பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். அதன்பின்னர் பேக்கரி உற்பத்திகள் தடைப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post