தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற மகன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நேற்றுக் காலை நடந்துள்ளது.
தெல்லிப்பளை கிழக்கைச் சேர்ந்த மகாலிங்கம் இராகவன் என்ற 34 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அம்பனையில் உள்ள தங்களது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு இராகவன் உணவு கொண்டு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதிகளில் நேற்றுக் காலை இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், தோட்டத்தில் இராகவனை மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கத்துக்கு இலக்கான இராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்த இராகவனின் குடும்பத்துக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.
Discussion about this post