யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கு அட்டை வழங்கப்படும் நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டையே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு வாகனத்துக்கும் விநியோக அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கும், பிரதேச செயலர்களுக்கும் இடையே நடந்த கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒருவரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருக்குமானால் அவற்றில் ஒன்றுக்கே விநியோக அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை பெற்றோல் விநியோகத்துக்கான விநியோக அட்டைகளே வழங்கப்பட்டன என்றும், இனிமேல் டீசல் வாகனங்களுக்கான விநியோக அட்டைகளும் வழங்கப்படும் என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post