யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பஸ் இன்று அதிகாலை வவுனியாவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்து பீட மாணவி உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 16 பேர் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஸ்ணன் அஜாகரி என்ற 23 வயது யுவதியும், பஸ் சாரதியான உடுப்பிட்டி, கோயிலடியைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் என்ற 24 வயது இளைஞரும், பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் என்ற 24 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
வவனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி பஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, போட்டியிட்டு அதிவேகமாகப் பயணித்ததன் காரணமாகவும் மற்றொரு பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாலும் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
Discussion about this post