நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியால் பருத்தித்துறை முதல் தெய்வேந்திர முனை நோக்கிய அரச எதிர்ப்பு பேரணி இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்தப் பேரணி யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தை அடைந்தபோது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அங்கு குழப்பம் மேற்கொள்ள முயன்றதை அடுத்துப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கோபமடைந்த மக்கள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் மீது செருப்பைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆரதவாகச் செயற்பட்டுவரும், அருண் சித்தார்த் என்பவர் மீது பொதுமக்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அங்கு கடமையில் இருந்த பொலிஸார், அந்த நபரைக் காப்பாற்ற முயன்றபோதும், முச்சக்கர வண்டிக்குள் வைத்தும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட அரச எதிர்ப்புப் பேரணி, ஏழு நாள்களில் கொழும்பைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post