யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட ஐந்து பேர் கடற்படையால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாகப் பலர் தப்பிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறாக யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குச் செல்லமுற்பட்ட ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post