வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு
இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன இந்த திட்டத்தில் உளவாங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தீவுகளில் 2025ம் மார்ச்மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த திட்ட உதவிகளிற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர்காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.
Discussion about this post