நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து நேற்று முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாளை காலை 7 மணிவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம்வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று சற்றுமுன்னர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Discussion about this post