இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 3 ஆயிரத்து 516 ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன என்று பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு, டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பற்றைக் கோரியே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8ஆம் திகதிவரையான மூன்று மாதங்களில் சமையல் எரிவாயுவுக்காகவே அதிக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு கோரி ஆயிரத்து 185 ஆர்ப்பாட்டங்களும், பெற்றோல் வழங்கக் கோரி ஆயிரத்து 173 ஆர்ப்பாட்டங்களும், டீசல் வழங்கக் கோரி ஆயிரத்து 5 ஆர்ப்பாட்டங்களும், மண்ணெண்ணெய் கோரி 153 ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 2ஆம் திகதி முதல் மே மாதம் 8ஆம் திகதிவரையான ஒருவார காலத்திலேயே அதிக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் ஆயிரத்து 111 ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post