முல்லைத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-12-2023) நண்பகல் 12.30 தொடக்கம் இன்று (24) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (24-12-2023) அதிகாலை (4.30 மணி தொடக்கம்) பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முல்லைத்தீவின் கள்ளப்பாடு, தீத்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post