சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே வாத்துவ ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது மார்பைப் பிடித்துக் கொண்டு வந்த, முன்னாள் முதலமைச்சர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அம்புலன்ஸ் மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Discussion about this post