முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. அதனால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது ஒரு முட்டையின் விலை 32 ரூபா முதல் 33 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. கோழி இறைச்சி 850 முதல் 900 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் கோழித் தீவனத்தின் விலை உயர்வாலேயே முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளன என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post