மசகு எண்ணெய் கப்பலை அரசாங்கம் இறக்குமதி செய்யாமையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் கப்பலை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால், அநாவசியமாக எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post