மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீள் பிறப்பிக்கத்தக்க சக்தி வலு உற்பத்தி திட்டங்களுக்கு உதவியளிக்காமையால் கட்டண அதிகரிப்பு கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீள் பிறப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை அனுமதி வழங்க வேண்டும். அதன் பணியாளர்களுக்கான வேதனத்தை செலுத்துவதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பதை விடவும் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது எனறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Discussion about this post