இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) மாலைத்தீவுகள் அரசாங்கம் அறிவித்தது.
இதனையடுத்து, இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு இஸ்ரேலியர்களை இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
”இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்று மாலத்தீவு அறிவித்துள்ளதால், அழகான சில இந்திய கடற்கரைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இங்கே இஸ்ரேலியர்கள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள். அதோடு, மிகுந்த விருந்தோம்பலையும் நீங்கள் பெறுவீர்கள்,” என தூதரகத்தின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சத்தீவு, கோவா, அந்தமான் நிகோபர் தீவுகள், கேரளா ஆகியவற்றின் கடற்கரை புகைப்படங்களையும் இணைத்து இந்த கோரிக்கையை இஸ்ரேலிய தூதரகம் விடுத்துள்ளது.
அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து, மாலைத்தீவுகள் அதிபர் முகமது மொய்சு (Mohamed Muizzu) இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும், பாலஸ்தீனியர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கு சிறப்பு தூதுவரை நியமிக்கவும் அதிபர் முகமது மொய்சு தீர்மானித்துள்ளார்.
Discussion about this post