Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த மருமகள்

July 7, 2024
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த மருமகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை கம்பளை(Gampala) ஹெட்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இரண்டரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயதுடைய வயோதிப பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண் திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் வயோதிப மாமியார் மற்றும் தனது 7, 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேற்படி கொலைச் சம்பவம் நேற்று(06) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துள்ளார்.இந்த நிலையில், பொலிஸார் யாழ்ப்பாணத்தில் வந்த சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பெண்ணிடம் கலந்துரையாடி இன்று(07) அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேற்படி, கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதுடன் ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தொடருந்தில் மோதுண்டு இரு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 8 2024 திங்கட்கிழமை

Next Post
இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 30 2024 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 8 2024 திங்கட்கிழமை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.