மஹபொல புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பல பல்கலைக்கழகங்களில் மஹாபொல தவணை கட்டணம் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகத்தித்துள்ளார்.
புலமைப்பரிசில் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிக இசெட் வெட்டுப்புள்ளி பெற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் ஆகியோருக்கு மாற்றமின்றி மஹபொல புலமைப்பரிசில் வழமை போன்று தொடர்ந்து வழங்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post