மருந்துகளின் பற்றாக்குறையால் சிறிலங்காவில் மருத்துவமனைகளின் ஆய்வுகூட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
லேடி ரிஜ்வே மருத்துவமனை உட்பட நாட்டின் பிரதான மருத்துவமனைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அதேவேளை, பஞ்சு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் தெரிவித்த அவர், சில மருத்துவமனைகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சத்திரகிசிச்சைகளை மேற்கொள்கின்றன என்றும் தெரிவித்தார்.
இலங்கை மருந்துகள் விநியோக பிரிவில் போதியளவு பொருள்கள் இன்மையே பற்றாக்குறைக்குக் காரணம் என்று தெரிவித்த அவர், சிலவகை மருந்துகளை கேட்டால் அவை மருந்துகள் விநியோக பிரிவில் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post